Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்டு ஏஐ நிறுவனத்துக்கு ஊர்வசி ரவுட்டேலா நோட்டீஸ்

மும்பை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, பாலிவுட் முன்னணி நடிகையும், இந்தியாவின் பிரபல மாடலுமான ஊர்வசி ரவுட்டேலாவின் அனுமதியின்றி பெயர், போட்டோக்கள், வீடியோக்களை சட்டவிரோதமாக வணிக ரீதியில் பயன்படுத்தியதாக பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஊர்வசி ரவுட்டேலா தரப்பினர், தங்களது ஒப்புதல் பெறாமல் அடையாளத்தை திருடி விளம்பரம் தேடிய வெளிநாட்டு நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இழப்பீட்டு தொகையாக ரூ.7,000 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊர்வசி ரவுட்டேலா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் அனுமதியின்றி நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது.

இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளின் மூலம் இழப்பீடு பெறப்படும்’ என்று திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊர்வசி ரவுட்டேலாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிராஜ் ஹாசன், நடிகையின் ரூ.7,000 கோடி இழப்பீட்டு கோரிக்கை முற்றிலும் அபத்தமானது என்று சொல்லி நிராகரித்துள்ளார்.