Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குளுகுளு பிரதேசங்களில் குவிந்த நடிகைகள்

கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், திரைப்பட நடிகர், நடிகைகள் தங்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுப்பயணத்தை குளுகுளு பிரதேசங்களுக்கு மாற்றியுள்ளனர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள மணாலியில் தங்கியிருக்கிறார். அங்குள்ள அழகான பனி மலைகளுக்கு இடையே அவர் பனியில் விளையாடும் மற்றும் இயற்கை அழகை ரசிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

நாகார்ஜூனாவுடன் அவர் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்காக அங்கு சென்றுள்ளார். நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க லடாக் சென்றுள்ளார். பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ள ஜான்வி கபூர், தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.