Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

500க்கும் அதிகமான நடன கலைஞர்களை கொண்டு பிரம்மாண்டமாக உருவாகி வரும் "கங்குவா" திரைப்படத்தின் பாடல் காட்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

"கங்குவா" படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் "கங்குவா" 500க்கும் அதிகமான நடன கலைஞர்களை கொண்டு பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சி தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கொடைக்கானலில் இந்த படத்திற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பிற்காக "கங்குவா" படக்குழு கொடைக்கானல் சென்றுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சூர்யா வித்தியாசமான ஒரு கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவன சார்பில் தயாராகும் "கங்குவா" படம் 3D வடிவில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் இது என்ற ஒரு தகவலும் பரவி வருகின்றது.