Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டார்க் காமெடி கதையில் புது படம்

சென்னை: யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொள்கிறார்.

இசையமைப்பாளராக எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், கலை இயக்குனராக தினேஷ் குமார் பணியாற்றுகின்றனர். பூஜை விழாவில் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.தணிகை வேல் மற்றும் சமூக ஆர்வலர் மதிச்சியம் ஏ. கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். டார்க் காமெடி ஜானராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.