Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டார்க் ஹியூமர் கதை மாஸ்டர் பிளான்

சென்னை: உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்னையில் நாயகன், நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது. தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.