Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இப்போதும் ஒரே நாளில் 6 பாடல்களை உருவாக்கிய இளையராஜா

சென்னை: ‘கடவுள் தந்த பரிசு’ திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் அந்த பாடல்களை பதிவு செய்து கொடுத்த இளையராஜாவை, ராமராஜன், ‘கடவுள் தந்த பரிசு’ இயக்குனர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, நன்றியை தெரிவித்தனர்.

பின்னர் இளையராஜாவிடம் ஆசி பெற்றார் ராமராஜன். 1980,90களில் இதுபோல் ஒரே நாளில் பல பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்துள்ளார். இப்போது 84 வயதிலும் ஒரு படத்துக்கான முழு பாடல்களையும் அவர் கம்போஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார்.

வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ராமராஜன் நடித்து 37 ஆண்டுகளுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், டிடிஎஸ் ஒலியுடன் ‘கரகாட்டக்காரன்’ ரீ ரிலீசாகிறது.