Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டிசி பட எழுத்தாளரின் புது படம் அறிவிப்பு

சென்னை: ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல், ஏவியேட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குனரும் ‘டிசி’ படத்தின் எழுத்தாளருமான பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், பிரபு, விஜய் வர்மா முதன்மை வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர், காமெடி கதையாக உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா.ஜி.கே எடிட்டிங் பணிகளையும் பி.சி.ஸ்டன்ட்ஸ் சண்டை பயிற்சியையும் கவனிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.