Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டெல்லி என்ஜிஓ கருத்தரங்கில் சௌந்தரராஜா

சென்னை: தமிழ் சினிமாவில் நாயகனாகவும் இணைநாயகனாகவும் கவனம் பெற்ற நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடைபெற்ற விஷ்வ யுவக் கேந்திரா அமைப்பு நடத்திய NGOCSR கான்பரன்சில் செளந்தரராஜா மூன்று நாட்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் கலந்து கொண்டன. தன்னுடைய சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முன்னெடுத்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால், அதற்கான அனுபவம் மற்றும் வழிகாட்டுதலை பெறவும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக அவர் கூறினார்