தனுஷை தொடர்ந்து தயாரிப்பாளர் நடவடிக்கை ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்
‘சந்திரமுகி’ படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் நயன்தாராவுக்கு காட்டவில்லை. ஆனால் ‘சந்திரமுகி’ படத்தின் முழு உரிமையும் தற்போது ஏபி பிலிம்சிடம் உள்ளது. சிவாஜி புரொடக்ஷனிடமிருந்து ஏபி பிலிம்ஸ் உரிமைகளை பெற்றுக்கொண்டது. அந்நிறுவனம், தங்களிடம் அனுமதி பெறாமல் சந்திரமுகி காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக நயன்தாரா தங்களுக்கு ரூ.5 கோடியை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
