Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரவி, ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ்தான் காரணம்: சுசித்ரா பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகர் கள் சிலரை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. கடந்த ஆண்டு திரைத்துறையில் நடக்கும் போதை பார்ட்டி பற்றி பேசி சலசலப்பை உண்டாக்கினார். தற்போது ரவி மோகன், ஆர்த்தி தம்பதி விவாகரத்து குறித்து யூடியூப் ஒன்றில் சுசித்ரா பேசியது வைரலாகி வருகிறது. அது வருமாறு: ரவி மோகன் காதலிக்கும்போது, ஆர்த்தி தன்னை வேறொருவராக காட்டிக்கொண்டார். திருமணத்துக்கு பிறகு மாறிவிட்டார்.

தனுஷுடன் ஆர்த்திக்கு தொடர்பு இருந்தது. இந்த அநியாயத்தை பார்த்தும் பலர் வாயை மூடிக்கொண்டிருந்தனர். ரவி மோகன் ஷூட்டிங்கிற்கு சென்ற பிறகு ஆர்த்தி பார்ட்டிக்கு செல்வார். அப்படி பார்ட்டிக்கு சென்றபோது தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாகி இருக்கின்றனர். இந்த விஷயம் ரவி மோகனுக்கு தெரிந்த பிறகு ஆர்த்தியை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.

ஆர்த்தி தனது மகன்களை வைத்து ரவி மோகனை பிளாக்மெயில் செய்து வருகிறார். ரவி மோகன் தனது மகன்களை சந்திக்க ஆர்த்தி அனுமதிப்பது இல்லை. பள்ளியிலாவது மகன்களை பார்க்க முயற்சித்தால், பாடிகார்டுகளுடன் மகன்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் ஆர்த்தி. இது சில பணக்கார லேடிகளின் செயல். ரூம் போட்டு யோசித்து இதை செய்கிறார்கள் போல் தெரிகிறது. ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் சேர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பணம் கொடுத்து ரவி மோகன், கெனிஷா பற்றி அவதூறு பரப்புகின்றனர்.

மகன்களின் வீடியோவை வெளியிட்டு அனுதாபம் தேடி வருகிறார் ஆர்த்தி. கெனிஷா மிகவும் அப்பாவி. அவர் ரவி மோகனின் நிலையை என்னிடம் எடுத்து சொல்லி, ரவி மோகனின் மனவலியை தன்னால் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டார். தற்போது அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். இவ்வாறு சுசித்ரா பேசியுள்ளார். ரவி மோகன், ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ்தான் காரணம் என்று அவர் பேசியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.