Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன்

சென்னை: விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘சமர்’, மற்றும் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் சந்திரமவுலி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு. இவரது இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாகவும் இந்த நிறுவனத்தின் 9வது படைப்பு இது என்றும் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், பணியாற்ற உள்ள டெக்னீஷியன்கள் விவரம் விரைவில் அறிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.