சென்னை: பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ள ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ ஸ்ரீகார்த்திக் எழுதி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தவிர தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் எண்டர்டெயின்மெண்ட், சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. சாய் கிருஷ்ணா கட்வால் இணை தயாரிப்பு செய்கிறார். இதில் ருக்மிணி வசந்த் ஏற்றுள்ள ‘தாரா’ என்ற கேரக்டரை அறிமுகப்படுத்தும் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தேவ் ராம்நாத், ஸ்ரீகார்த்திக் ஆகியோரால் தொடங்கப்பட்ட மேட்பாய்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற தமிழ் வெப்தொடரான ‘ஐ ஹேட் யூ ஐ லவ் யூ’, பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் குறும்படமான ‘சைல்ட்ஹூட் டைரீஸ்’ ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஜஸ்வந்தின் சிருனி சினி கார்ப்பரேஷன், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சி லா சோ’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றது. ‘கீதா கோலா’, ‘காந்தா’ ஆகிய படங்களுடன் தொடர்புடைய சாய் கிருஷ்ணா கட்வாலும் இப்படத்தின் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார்.
