Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

3வது படத்தை தயாரித்து இயக்கும் ஷிவானி செந்தில்

சென்னை: கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்னைகள்,

அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - கோலஞ்சி குமார். இசை - ஜோஸ் பிராங்க்ளின்.