Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் பால்கி இயக்கத்தில் வித்யா பாலன்

பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர், ஆர்.பால்கி. அவர் தனுஷை வைத்து இந்தியில் இயக்கிய ‘ஷமிதாப்’ என்ற படம், ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானது. இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வைத்து ‘சீனி கம்’, ‘பா’, ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை ஆர்.பால்கி இயக்கியுள்ளார். தற்போது அவர் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார். இதில் வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏற்கனவே 2009ல் பால்கி இயக்கிய ‘பா’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆர்.பால்கி இயக்கத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜெயிலர் 2’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் வித்யா பாலன், அடுத்து நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். முன்னதாக அவர், கடந்த 2019ல் திரைக்கு வந்த ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்திருந்தார்.