Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

94 வயதில் 61வது படத்தை இயக்குகிறார்

இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில், கடந்த 54 வருடங்களில் 60 படங்களை இயக்கியவர், திரையுலகின் மூத்த இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். தற்போது அவருக்கு 94 வயதாகிறது. எனினும் இயக்குனர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்று பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். தமிழில் ‘திக்கற்ற பார்வதி’, ‘இரு நிலவுகள்’, `ராஜ பார்வை’, ‘பேசும் படம்’, `அபூர்வ சகோதரர்கள்’, `மைக்கேல் மதன காமராஜன்’, `மகளிர் மட்டும்’, ‘சின்ன வாத்தியார்’, `காதலா காதலா’, `லிட்டில் ஜான்’, `மும்பை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சிங்கீதம் சீனிவாசராவின் 61வது படமாக உருவாகும் புதிய படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மேற்பார்வையாளராக இயக்குனர் நாக் அஸ்வின் செயல்படுகிறார். ‘ஆதித்யா 360’ என்ற படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க பாலகிருஷ்ணா, சிங்கீதம் சீனிவாசராவ் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும் கூட, அப்படம் பல்வேறு காரணங்களால் தொடங்கப்படவில்லை. தற்போது சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கும் படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசை அமைக்கிறார்.