Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘டைரி’ பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆனார்

சென்னை அருள்நிதி நடிப்பில் திரைக்கு வந்த ‘டைரி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இன்னாசி பாண்டியன், தற்போது ‘வெஸ்டர்ன் சாட்ஸ் பிக்சர்ஸ் எல்எல்பி’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ‘டைரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், 4 வருடங்களுக்கு பிறகும் அதுபற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில், இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின் நடித்த ‘புல்லட்’ என்ற படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இது விரைவில் திரைக்கு வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளுடன் தனது வாழ்க்கைக்கும், வேர்களுக்கும் இருக்கும் தொடர்பை பிரதிபலிக்கும் வகையில், ‘வெஸ்டர்ன் சாட்ஸ் பிக்சர்ஸ் எல்எல்பி’ என்ற பெயரை தயாரிப்பு நிறுவனத்துக்கு சூட்டியுள்ளதாக இன்னாசி பாண்டியன் தெரிவித்துள்ளார்.