சென்னை: திரைத்துறையில் நெருங்கிய தோழிகளாக நயன்தாரா, நஸ்ரியா உள்ளனர். இந்நிலையில் இவர்கள் நடித்த தனித்தனி திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது. நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படம், தீபாவளியை முன்னிட்டு நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. இதே நாளில் சூர்யாவுடன் நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’ படமும் வெளியாகிறது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை நஸ்ரியா ‘சீன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், நஸ்ரியாவின் இந்தப் பெரிய திரை ரீஎன்ட்ரியை பாராட்டும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘‘உங்களை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்று கூறி தனது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். பதிலுக்கு நஸ்ரியா, உங்களது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் வெற்றி காண வாழ்த்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
