Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கூத்து கலைஞர்களின் ஆவணப்படம்

சென்னை: சென்னையை சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் என்ற புகைப்பட கலைஞர், பல்வேறு கலைகள் பற்றிய தேடுதலில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வத்தோடு இயங்கி வரும் அவர் கேரளா, கண்ணனூரில் உள்ள ஒரு கோயிலில் இவர் எடுத்த ‘தெய்யம்’ புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக் காலண்டரில் இடம் பெற்றது. அதேபோல் தமிழ்நாட்டில் நடக்கும் மயானக் கொள்ளை, குலசை தசரா, வாரணாசியில் நடக்கும் மாசான் ஹோலி போன்ற சடங்கு நிகழ்ச்சிகளையும், புஷ்கர் ஒட்டக திருவிழா, மகா கும்பமேளா போன்றவற்றையும் புகைப்படமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.

அந்தவகையில், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை சார்ந்து ‘ஊர் கூடும் இரவு’ என்ற பெயரில் ஒரு தெருக்கூத்து ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் குறித்து இயக்குனர் ரம்யா ஸ்ரீராம் பேசும்போது, ‘இப்படத்தை எடுப்பதற்கு எனக்கு பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்த ஒளிப்பதிவாளர் அருண்சுரேஷ், எடிட்டர் செல்வ பாண்டி, இசையமைப்பாளர் யானி ஆகியோருக்கு நன்றி. அருகில் என்ன இருக்கிறது என்றே தெரியாத இருட்டுக்குள் எல்லாம் படமாக்கினோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலில் படப்பிடிப்பு நடத்தினோம்’ என்றார்.