' வேட்டையன்' படத்துக்குப் பிறகு தோசா கிங் !
இந்நிலையில், இயக்குநர் ஞானவேல் உண்மை கதையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 'தோசா கிங்' என்ற பெயரில் உருவாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஞானவேலுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார் ஹேமந்த் ராவ். இவர் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு ஏ/பி’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
