கனவில் கூட நினைக்கவில்லை: கிரித்தி ஷெட்டி
சென்னை: இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் கிரித்தி ஷெட்டி, முன்னதாக ‘தி வாரியர்’, ‘கஸ்டடி’ ஆகிய தெலுங்கில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் ஹிரோயினாக நடித்திருந்தார். தற்போது தமிழில் நேரடியாக பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம், வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது.
தொடர்ந்து கார்த்தி ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து, ரவி மோகன் ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘ஜீனி’ என்ற படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘எனது நேரடி தமிழ் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த பிரபஞ்சம் அதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று நம்புகிறேன். 3 கேரக்டரும் மாறுபட்டு இருக்கும்’ என்றார்.
