Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘திரிஷ்யம்’ 4ம் பாகத்துக்கு முன்பே 5ம் பாகம்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளியான ‘திரிஷ்யம்’ என்ற படத்தின் 2 பாகங்களும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது 3ம் பாகம் உருவாகியுள்ளது. வரும் 21ம் தேதி திரைக்கு வரும் குற்றப்புலனாய்வு திரில்லர் படமான இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் மோகன்லால் பேசுகையில், ‘நான் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றால் ‘திரிஷ்யம் 4’, ‘திரிஷ்யம் 5’ ஆகிய படங்களை தயாரிக்க படக்குழு தயாராக இருக்கிறது.

அதோடு, ‘திரிஷ்யம்’ 4ம் பாகத்துக்கு முன்பே 5ம் பாகம் உருவாக்கப்படும். ‘திரிஷ்யம் 3’ கிளைமாக்ஸ் தனித்துவமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார். இதில் மீனா, எஸ்தர் அனில், ஹன்சிபா ஹாசன், ஆஷா சரத், சித்திக் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசை அமைத்துள்ளார்.