Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ட்ரோன்ஸ் விமர்சனம்

கல்லூரியில் இருந்து டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்ஜே தீபக் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். இவ்விஷயம் தங்களது பெற்றோர்களுக்கு தெரியக்கூடாது என்று, பிளாக்ஹோல் என்ற அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் தங்குகின்றனர். திடீரென்று அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில், ஒரு டிரோன் மூலம் வெளியுலகை பார்க்கின்றனர். அங்குள்ள சித்தி இத்னானியை டிராவிட் செல்வம் காதலிக்கிறார். அதை எதிர்க்கும் சித்தி இத்னானியின் சூனியக்காரி பாட்டி தேவதர்ஷினி, அந்த கோஷ்டியை அடைத்து வைக்கிறார். அவர்களை தேடி போலீஸ் அதிகாரி சினிமாவாலா சதீஷ் வருகிறார். அவருக்கு தேவதர்ஷினி மீது காதல் ஏற்படுகிறது.

பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. பாட்டி கதையை பறக்கும் தட்டுடன் இணைத்து, முழுநீள காமெடி படத்தை இயக்குனர் ஆர்.ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியுள்ளார். கன்னக்குழி அழகி சித்தி இத்னானி அழகிலும், நடிப்பிலும் அசத்தியுள்ளார். நிறபாகுபாடு, உருவகேலி செய்பவர்களுக்கு அஞ்சலி நாயர் சவுக்கடி கொடுத்துள்ளார். தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், சினிமாவாலா சதீஷ், ஆர்ஜே தீபக், குரேஷி, சசி செல்வராஜ் ஆகியோரின் கேரக்டர்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

ஜெயந்த் சேது மாதவனின் ஔிப்பதிவு, ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை, எடிட்டர் சதீஷ் சூர்யாவின் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அறிவியல் பின்னணியிலான காமெடி படத்தை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் தந்துள்ளனர்.