Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் துல்கர் மிருணாள் கெமிஸ்ட்ரி

சமீபத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரும் மழையில் குடை பிடித்துக்கொண்டு நிற்கும் போட்டோ ஒன்று வைரலானது. உடனே இதை ‘சீதா ராமம் 2’ என்ற படத்துக்கான போட்டோசெஷன் என்று தகவல் பரவியது. ஆனால், ‘சீதா ராமம்’ படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அந்த போட்டோ குறித்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரும் இணைந்து ‘பீகி பீகி’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். அதன் புரமோஷனுக்காக இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளார்.

ஜஸ்லீன் ராயல் இணைந்து பாடியிருக்கிறார். இர்ஷாத் காமில் பாடல் எழுதியுள்ளார். இந்த ஆல்பத்தின் கான்செஃப்ட், எதிர்காலத்தில் நடப்பது போல் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரும் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு டிராவல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சீதா ராமம்’ படத்துக்கு பிறகு அவர்களுடைய காதல் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட் ஆகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.