Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாணவரை காரில் கடத்தி கொடூர தாக்குதல்: கன்னட நடிகர் துனியா விஜய் மகன் மீது போலீசார் வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு சாலையிலுள்ள ஆர்.வி பல்கலைக்கழகத்தில், கன்னட நடிகர் துனியா விஜய்யின் மகன் சாம்ராட், மற்றொரு மாணவர் மனிஷ் கவுடா ஆகியோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஆர்.நகர் பகுதியில் சாம்ராட் தனது நண்பர்களுடன் ஜிப்சி வாகனத்தில் சென்றபோது, மனிஷ் கவுடா தனது நண்பர்களுடன் காரில் அவரை முந்திச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாம்ராட் மற்றும் அவரது நண்பர்கள், மைசூரு சாலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் வெளியே நின்றிருந்த மாணவர் மனிஷ் கவுடாவை வழிமறித்து, வலுக்கட்டாயமாக தங்களது காரில் ஏற்றி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மனிஷ் கவுடா, சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் பேசுகையில், ‘புகாரின்பேரில் சாம்ராட் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.