மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில், தனது குழந்தையுடன் தனியாக வசிக்கிறார் மோனிகா செலினா. திடீரென்று அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறார் கொலைகாரன் சதா நாடார். பின்னர் நடப்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம். முன்னதாக ‘ல்தகா சைஆ’ என்ற படத்தை உருவாக்கி நடித்திருந்த சதா நாடார், மோனிகா செலினா தம்பதி, மீண்டும் இப்படத்தை உருவாக்கி நடித்துள்ளனர். இருவருமே தங்களுக்கான வேடங்களில் நியாயம் செய்து, சிறப்பாக நடித்துள்ளனர். முக்கிய கேரக்டர்களில் சுந்தரம், பாண்டி ஆகியோர் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இ.ஜே.ஜான்சன் பின்னணி இசை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. வீட்டுக்குள் நடந்து முடியும் கதைக்ேகற்ற ஒளிப்பதிவை எம்.எஸ்.மனோகுமாரின் கேமரா வழங்கியுள்ளது. பரணி செல்வத்தின் எடிட்டிங் குறிப்பிடத்தக்கது. வழக்கமான பழிவாங்கும் கதையை உணர்ச்சிகரமாக சொன்ன இயக்குனர் சதா நாடார், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை போதித்தாலும், குற்றத்தை தடுக்க குற்றமே செய்ய வேண்டும் என்று முடித்தது நெருடுகிறது. மற்றபடி, பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றிய பாடத்தை நடத்தியிருக்கிறார்.
