Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பசங்க எல்லாரும் லவ் மூடில் இருக்காங்க...கார்த்தி ‘கலகல’

சென்னை: 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ, மோனிகா இணைந்து தயாரித்துள்ள படம், ‘மிஸ் யூ’. சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன், ெஜயப்பிரகாஷ், பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், அனுபமா குமார், ரமா, சஷ்டிகா, மாறன் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களை தொடர்ந்து என்.ராஜசேகர் இயக்கியுள்ளார்.

வரும் 29ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி பேசியதாவது: மணிரத்னம் சாரிடம் சித்தார்த்தும், நானும் உதவி இயக்குனர்களாக பணியாற்றினோம். ‘மிஸ் யூ’ என்பது, இன்றுள்ள பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தை. அதாவது ‘லவ் யூ’, ‘மிஸ் யூ’ என்பதில் இருந்து ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை டைட்டிலாக்கி விட்டீர்கள். இன்று சோஷியல் மீடியாவில் பசங்க போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன.

ஆனால், நாம் ஆக்‌ஷன் படங்களையே எடுக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்‌ஷன் படமாக எடுத்து, லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து, நான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல் ‘மிஸ் யூ’ இருக்கிறது. விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலுள்ள பாடல்கள் மற்றும் காதல், அதைச்சுற்றி நடக்கும் விஷயங்களை இப்போது பார்த்தாலும் உற்சாகமூட்டுவதாக இருக்கும். ‘பாய்ஸ்’ சித்தார்த் என்பதாலேயே அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியேதான் இருக்கிறார். இப்படத்தின் ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார்2’ படத்தில் என்னுடன் நடித்து வருகிறார். ரொம்ப சின்சியரான ஒரு பெண். மிகச் சிறப்பாக நடிக்கிறார்.