Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கண்கள் வயிறு வீங்கியது: ஸ்ருதிகாவுக்கு என்ன பிரச்னை?

சென்னை: நடிகை ஸ்ருதிகா அர்ஜுனுக்கு கண்கள் வீங்கி, கண்ணே திறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அவர் தி 50 எனும் இந்தி டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். வீங்கிய கண்களுடன் அவர் தனது இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது கண் நோய் அல்லது மெட்ராஜ் ஐ இல்லை. எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளது. அதிக காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இதனால் கண்களில் தொற்று ஏற்பட்டு கண்கள் வீங்கி காணப்படுகின்றன.

கண்களை திறக்க கூட முடியவில்லை. அது போல் வயிற்றிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. வயிறும் வீங்கியுள்ளது. தற்போது நான், தி 50 எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறேன். உடல் நலப் பிரச்னையால் அதிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு ஸ்ருதிகா அர்ஜுன் கூறியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக  படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ருதிகா அர்ஜுன். தொடர்ந்து ஆல்பம் படத்தில் நடித்தார். மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தித்திக்குதே உள்பட மேலும் சில படங்களில் நடித்தார். இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.