Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பறிபோன பஹத் பாசிலின் இந்தி வாய்ப்பு

தென்னிந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகராக பஹத் பாசில் மாறியுள்ளார். இனி அவர் இந்தியில் நடிக்க வேண்டியது ஒன்றே பாக்கி. இந்தியில் ‘தமாஷா’, ‘லைலா மஜ்னு’, ‘காக்டெய்ல்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள இம்தியாஸ் அலி மூலமாக அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ‘இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ என்று பெயரிடப்பட்ட அப்படத்தில், ‘அனிமல்’ திரிப்தி டிம்ரி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், அதுபற்றிய அறிவிப்பு கூட வெளியிடப்படாமல், திடீரென்று படம் கைவிடப்பட்டது.

மும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் பங்கேற்ற இம்தியாஸ் அலி கூறுகையில், ‘பஹத் பாசிலும், நானும் இணைந்து பணியாற்ற முயற்சித்தோம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. நிறைவேறவில்லை என்றாலும், அவருடன் சேர்ந்து பணியாற்றும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் கண்டிப்பாக பஹத் பாசிலுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.