Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பொய் குற்றச்சாட்டு கூறுவதாக பெண் மேனேஜர் மீது தன்ஷிகா புகார்

சென்னை: நடிகை தன்ஷிகா தமிழில் ‘பேராண்மை’, ‘பரதேசி’, ‘கபாலி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார். தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் டிவிட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷின் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா குற்றம் சாட்டினார்.

மேலும் இது தொடர்பாக தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து தன்ஷிகா கூறும்போது, ‘பிரியா என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பே பணியிலிருந்து நீக்கிவிட்டேன். ஏதோ காழ்ப்புணர்ச்சியில் என்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார். அவர் குறிப்பிடும் நபர்கள் யார் என்றுகூட எனக்கு தெரியாது. இனியும் இதுபோல் அவர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.