Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குடும்ப பிரச்னை பின்னணியில் இறுதி

சென்னை: சில்வர்டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இறுதி’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்து இயக்குகிறார் சிவகுமார் நாயர். கதாநாயகியாக நயானசிரி நடிக்கிறார்.  மருது, பராசக்தி பிரபலமான குலாப், புள்ளி லீலா, வி.கே. ரகுநாதன், காந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மற்றும் மோகன்ராம் இசையமைக்க, முருகன்மந்திரம் பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவு - ராஜேந்திரன், நடன அமைப்பு - ரமேஷ் ரெட்டி. சண்டை பயிற்சி - சரவணன். படத்தைப் பற்றி இயக்குனர் சிவ்குமார் நாயர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு குடும்பத்துல நடக்கிற சம்பவங்கள் எப்படி எல்லாம் அந்த குடும்பத்துல சண்டைகள் வருது, எப்படி அந்தந்த குடும்பங்கள் பிரிந்து போகிறது என்று இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லி இருக்கிறேன் கேரளா, சித்ராஞ்சலி ஸ்டுடியோ மற்றும் ஊட்டி, ஏற்காடு, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது . இது மக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை ஏற்படுத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்’’ என்றார்.