Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நயன்தாராவுடன் ஒப்பிட்ட ரசிகர் சந்தோஷப்பட்ட ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: நேற்று ப்ரீமியர் ஷோ ஒன்றுக்கு சென்னை வந்த ஐஸ்வர்யா லட்சுமியிடம் ரசிகர் ஒருவர் சொன்ன ஒரு பாராட்டு, அதற்கு ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த ரியாக்‌ஷன் தான் தற்போது டிரெண்ட். சிவப்புநிற சேலையில் காரில் இருந்து இறங்கி வந்த அவரை பார்த்த ரசிகர்கள், ஆரவாரமாக வரவேற்றனர்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, இந்த சிவப்பு புடவை உங்களுக்கு செம்மையாக இருக்கு, நயன்தாராவைவிட நீங்க கலக்குறீங்க’ என்று சத்தமாக சொன்னார். அந்த ஒரு வார்த்தையை கேட்டு ஐஸ்வர்யா லட்சுமி சிரிப்பை அடக்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை கையால் மூடிக்கொண்டார். பின் புன்னகையுடன் அங்கிருந்து சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.