Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஃபேண்டஸி திரில்லர் படம் பீப்

சென்னை: எம் குவெஸ்ட் மூவிஸ் தயாரித்துள்ள படம், ‘பீப்’. இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ ராகவ் ரங்கநாதன், பஞ்சாப் பிரேர்னா கன்னா, யாமினி, ‘சார்பட்டா பரம்பரை’ பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்த ‘கேர்ள் ஃபிரெண்ட்’ என்ற படத்துக்கு இசை அமைத்த பிரசாந்த் விஹாரி ‘பீப்’ படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படத்தில் பணியாற்றிய ராம்குமார் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். அபிஷேக், விக்னேஷ் எடிட்டிங் செய்துள்ளனர். படம் குறித்து இல.சண்முகசுந்தர் கூறுகையில், ‘எம்பிஏ படித்துவிட்டு ஐடி கம்பெனியில் பணியாற்றிய நான், ‘கட்டு’ என்ற குறும்படத்தை இயக்கினேன்.

‘பீப்’ படம், ஹை கான்செஃப்ட்டில் பகுத்தறிவையும், ஃபேண்டஸியையும் கலந்து உருவாகியுள்ளது. கிரைம் திரில்லர் படமான இதில், கத்தி மற்றும் துப்பாக்கியை விட புத்திதான் சிறந்த ஆயுதம் என்று சொல்கிறேன். 6 நண்பர்களில் ஒருவர் இறந்துவிட, மற்றவர்கள் இறப்பின் மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது கதை. வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.