Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

1957களில் நடக்கும் கற்பனை கதை: டொவினோ தாமஸ்

சென்னை: வேர்ல்ட் வைட் பிலிம்ஸ், சி கியூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, டிஜோ ஜோஸ் ஆண்டனி எழுதி இயக்கியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற பான் இந்தியா படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி, ஜான் ஆண்டனி நடித்துள்ளனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா, சைதன்யா, சரண் தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இதன் தமிழ் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது டொவினோ தாமஸ் பேசுகையில், ‘இது ஒரு பீரியட் மூவி. 1957-1958 காலக்கட்டத்தில் கேரளாவில் காணப்பட்ட சமூக அரசியல் கட்டமைப்பு பின்னணியில் உருவாகியுள்ளது. இது ஒரு உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால், சில சம்பவங்களை தழுவி கற்பனை கலந்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதுதான் எனக்கு பிடிக்கும்’ என்றார். கயாடு லோஹர் பேசும்போது, ‘மலையாளத்தில் இது எனக்கு மூன்றாவது படம். எனது கேரக்டர் வித்தியாசமானது. இது என் இதயத்துக்கு நெருக்கமானதும் கூட. இதை எனக்கு வழங்கிய இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்புத்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம்’ என்றார்.