ஐதராபாத்: ‘தி கேர்ள் பிரெண்ட்’ என்ற தெலுங்கு படத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். ராஷ்மிகாவை காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா, எந்த நிகழ்ச்சியிலும் அது பற்றி பேசியதில்லை. அடுத்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பேட்டி தரும்படி பல மீடியாவிலிருந்து கேட்டும் விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டார்.
இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ராஷ்மிகாவுக்கு ஆயிரம் பேருக்கு மத்தியில் அவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது. ‘தி கேர்ள் பிரெண்ட்’ பட நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும் பலரையும் சந்திக்கிறார். அப்போது அங்கு வரும் ராஷ்மிகாவின் கையை பிடித்து அவரது வலது கையில் முத்தம் தருகிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
