Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூர்யாவால் படவாய்ப்பை இழந்த சுவாசிகா

மலையாள நடிகை சுவாசிகா தமிழில் ‘கோரிப்பாளையம்’, ‘அப்புச்சி கிராமம்’ உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் ‘லப்பர் பந்து’ என்ற படம் தான் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தந்தது. அப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சுவாசிகாவுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சமீபத்தில் சூரியுடன் ‘மாமன், சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ , ‘கருப்பு’ ஆகிய படங்களில் நடித்து வெற்றிபெற்றார். தற்போது சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுவாசிகா பிளாக்பஸ்டர் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் பேசும்போது, ‘சமீபத்தில் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்பட பலரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘பிளாஸ்ட்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டேன். அதில் அபிராமி நடித்த வேடம் முதலில் எனக்கு தான் வந்தது. அந்த நேரத்தில் ‘கருப்பு’, ‘நூறு சாமி’ படங்களில் நடித்து வந்ததால் ‘பிளாஸ்ட்’ படத்திற்கு என்னால் கால்ஷீட் தர முடியவில்லை. ‘பிளாஸ்ட்’ படத்தை தவறவிட்டது கொஞ்சம் வருத்தம் தான்’ என தெரிவித்துள்ளார்.