Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், ரியோ ராஜ்

சென்னை: ரவி மோகன், காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கி சின்ன கேரக்டரில் நடித்த பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக நடித்து, தொடர்ச்சியான வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். அவரது 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், தனது உதவியாளர் ஒருவரை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரதீப் ரங்கநாதன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இதில், ‘டியூட்’ படத்தில் அவரது ஜோடியாக நடித்திருந்த மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இது கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் உருவாகிறது. இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரியோ ராஜ், 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது ‘ராம் இன் லீலா’ படத்தில் நடித்து வரும் அவர், இந்த ஆண்டிற்குள் இரு படங்களையும் தயாரித்து வெளியிடுகிறார்.