Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பட மேடையில் கதறி அழுத பாயல் ராஜ்புத்

சென்னை: ‘ஆர்எக்ஸ்100’, ‘ஆர்டிஎக்ஸ் லவ்’, ‘மங்களவாரம்’ ஆகிய தெலுங்கு படங்கள் மூலம் பிரபலமானவர் பாயல் ராஜ்புத். அவரது தனித்துவமான கதைத் தேர்வு மற்றும் நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தார். இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் நடித்து வரும் அவர் தமிழில் ‘இருவர் உள்ளம்’, ‘லீடர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘கோல்மால்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹேமந்த் இயக்கத்தில் பாயல் ராஜ்புத் ஹீரோயினாக நடித்துள்ள ‘பர்ஸ்ட் டைம் 01-01-01’ என்ற தெலுங்கு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பாயல் ராஜ்புத் பேசுகையில், ‘‘8 மாதங்களுக்கு முன் ஒரு தியான பயிற்சி வகுப்புக்காக நான் ஜெய்ப்பூர் வந்தேன்.

அந்நேரத்தில்தான் என் தந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அது எனது வாழ்நாளில் மிக கொடுமையான காலம். நானும் என் குடும்பத்தினரும் உடைந்து போயிருந்தோம். என் தாயை என்னால் ஆறுதல்படுத்த முடியவில்லை. என் தந்தை தான் எனக்கு ஹீரோ’’ என்று தனது தந்தையை பற்றி பேசும்போது கண்ணீர் சிந்தினார். கடந்த ஆண்டு பாயல் ராஜ்புத்தின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.