Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படப்பிடிப்பில் ஹீரோவை கலாய்த்த சஞ்சனா நடராஜன்

மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ‘ஜான் டோ’ என்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் படம், வரும் 13ம் ேததி திரைக்கு வருகிறது. சந்துரு என்ற காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் தாஸ், ஏ.ராவ் என்ற காவல்துறை அதிகாரியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ‘பாகுபலி’ என்ற படத்தை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது. முக்கிய வேடங்களில் சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், மாஸ்டர் நீரவ் நடித்துள்ளனர். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசை அமைத்துள்ளார். பிரசாத் தேவினேனி, சோபு யார்லகட்டா இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதையை மதுமிதா, நிக்கோலஸ் செவாலியர் இணைந்து எழுதியுள்ளனர்.

விஜய் வெங்கடராமன் எடிட்டிங் செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். படத்தில் நடித்தது பற்றி சஞ்சனா நடராஜன் கூறுகையில், ‘மீண்டும் அர்ஜூன் தாஸுடன் இணைந்து நடித்துள்ளேன். அவர் மிகவும் இனிமையானவர். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது ஜோக் சொல்லி சிரிக்க வைத்துவிடுவார். இப்படத்தில் நிறைய பெண்கள் நடித்ததால், நாங்கள் அனைவரும் சேர்ந்து அர்ஜூன் தாஸை செமையாக கலாய்த்தோம். அவர் எங்களிடம் மாட்டிக்கொண்டு தவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது தமிழ் படத்தில் இணைந்துள்ள நாங்கள் இருவருமே போலீஸ் கேரக்டர் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது’ என்றார்.