Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேமிங் துறையில் நுழைந்தார் மகேஷ் பாபு

ஐதராபாத்: இந்தியாவில் உள்ள பெரும்பாலான கேமிங் நிறுவனங்கள் மொபைல் போன்களுக்கான கேம்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றன. இதில், ‘ஷார்ட்கன் கேம்ஸ்’ நிறுவனம் சர்வதேச தரத்திலான பிசி (PC), பிளேஸ்டேஷன் 5 (PlayStation 5) மற்றும் எக்ஸ்பாக்ஸ் (Xbox Series X|S) ஆகிய தளங்களுக்கான பிரீமியம் கேம்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதையடுத்து இந்த அணுகுமுறையே மகேஷ் பாபுவை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது.

ஜீத் சந்தன் மற்றும் விதித் மேத்தா ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் மகேஷ் பாபு வெறும் முதலீட்டாளராக மட்டுமில்லாமல், தனது சினிமா அனுபவத்தைக் கொண்டு கேம்களின் கதையமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் காட்சிப் பிரம்மாண்டங்களை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல உதவவுள்ளார்.

இது குறித்துப் பேசிய மகேஷ் பாபு, ‘‘இந்திய சினிமா ஏற்கனவே உலகளவில் தனது கதை சொல்லும் திறனை நிரூபித்துள்ளது. அதற்கு அடுத்தகட்ட தளம் இந்த கேமிங் துறைதான். இந்தியாவிலிருந்து உலகமே ரசிக்கும்படியான கதாபாத்திரங்களையும் கேம்களையும் உருவாக்க இதுவே சரியான நேரம்’’ என்று தெரிவித்துள்ளார்.