Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காயத்ரி ஷான் நடிக்கும் ‘மைத்ரி’

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ் சார்பில் தருண் குமார் பாப்னா தயாரித்துள்ள படம், ‘மைத்ரி’. பரத் ஜே.எஸ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நந்தகோபால், விவேகானந்தா, மீரா கதிரவன் கலந்துகொண்டனர். பரத் ேஜ.எஸ், காயத்ரி ஷான், நந்தன், ரவி ஏழுமலை, தர், சிவாங்கி நடித்துள்ளனர். மலையாளத்தில் 2023-24ல் வெளியான ‘அனுராகம்’, ‘பாலும் பழமும்’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளர் ஜோயல் ஜான்ஸ் தமிழில் அறிமுகமாகிறார். சமூகத்தில் காதலும், காதலர்களும் சந்திக்கும் சிக்கல்களையும், மானுட பரிதவிப்புகளையும் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

யுகபாரதி, குட்டி ரேவதி, வாசன், பா.ராஜா, இளமாறன் பாடல்கள் எழுதியுள்ளனர். மீரா கதிரவன் கூறுகையில், ‘சிறுபட்ஜெட் படங்களுக்கு எப்போதும் ஊடகங்கள் ஆதரவு வழங்கி வருகின்றன. ஆனால், தியேட்டரில் மூன்று நாட்களுக்கு மேல் சிறுபட்ஜெட் படங்கள் திரையிடப்படுவது இல்லை. அதுதான் இங்கு மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது. முன்பெல்லாம் லேட் பிக்-அப் ஆக நிறைய படங்கள் ஒரு வாரத்துக்கு பிறகு ஓடி வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. ஆனால், இன்று அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த நேரத்தில் ‘மைத்ரி’ போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வெற்றிபெற வேண்டியது மிகவும் அவசியம். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்’ என்றார்.