Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜி.டி நாயுடு பயோபிக்கில் நடித்தது ஏன்? மாதவன் விளக்கம்

சென்னை: நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன், கனிகா, விநய் ராய், தம்பி ராமய்யா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், ‘ஜி.டி.என்’ என்ற படத்தின் டிரைலர், கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. கோயம்புத்தூரை சேர்ந்த தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி நாயுடுவின் (கோபாலசாமி துரைசாமி நாயுடு) வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இதை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், டிரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்துக்கு பிறகு இந்நிறுவனங்கள் மீண்டும் இணைந்துள்ளது. 190 கி.மீ வேகத்தில் அதிநவீன சூப்பர் காரை ஓட்டிய மாதவன் கூறுகையில், ‘ஜி.டி நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், தேசபக்தி கொண்டவர். அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது’ என்றார்.