Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிளாமரை வெறுக்கும் ராய் லட்சுமி

முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக நடிப்பில் இருந்து விலகிய ராய் லட்சுமி, இரண்டு ஆண்டுகள் கட்டாய ஓய்வில் இருந்தார். தற்போது ஓரளவு குணமடைந்துள்ள அவர், மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனது ஆரம்பகாலத்தில் வருடத்துக்கு ஐந்து படங்களிலாவது நடித்துவிடுவேன். இப்போது நிலமை மாறிவிட்டது. எண்ணிக்கையை விட தரமே முக்கியமாகிவிட்ட நிலையில், ஆரம்பகாலத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காதது குறித்து இப்போது வருத்தப்படுகிறேன். எனக்கு நல்ல அனுபவங்களும், கெட்ட அனுபவங்களும் சேர்ந்தே கிடைத்தது. எனது படங்கள் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளன. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு இமேஜ் வட்டத்துக்குள் என்னை அடைத்துக்கொண்டது இல்லை.

மலையாளத்தில் என்னை, ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ போல் பார்க்கின்றனர். கோலிவுட்டில், நான் புடவை கட்டிக்கொண்டு நடித்தால் கூட, மக்கள் என்னை கிளாமர் ஹீரோயினாகவே பார்க்கின்றனர். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் அறிமுகமானபோது இருந்த அந்த அடையாளம் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டதால், மீண்டும் என்னிடம் கிளாமரை மட்டுமே பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இதுவரை போதுமான அளவுக்கு கிளாமராக நடித்துவிட்டேன். இனிமேல் யதார்த்தமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். மேக்கப் இல்லாமல் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்’ என்றார்.