Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கவர்ச்சியை தவறாக பார்க்க வேண்டாம்: ரகுல் பிரீத் சிங்

தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதல் திருமணம் செய்தார். தொடர்ந்து நடித்து வரும் அவர், கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். விழாக்களில் அதீத கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்க்கிறார். கடந்த மே 15ம் தேதி வெளியான ‘பதி பத்னி அவுர் வோஹ் தோ’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் கூறுகையில், ‘கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு அங்கம். எல்லை மீறாத எந்த கவர்ச்சியும் நல்லதுதான். இங்கு கவர்ச்சி என்பதை தவறாக பார்க்கும் கோணம் மாறிவிட்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். திருமணம் என்பது நடிகைகளின் வாழ்க்கையில் தடையாகி விடாது. திறமையை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. நல்ல புரிதல் எல்லாவற்றையும் மாற்றிவிடும்’ என்றார்.