சென்னை: பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசும் ‘தாரகை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை கதைப் பின்னணியில் இருக்கும் என்கிறார் க்ரிஷ். சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் இது.
