ஹீரோ ஏகன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கு வரும் இளம்பெண் அவரது காதலியாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் ஏகனுக்கு முன்பே ஒரு காதலி இருந்தது தெரியவருகிறது. பழைய காதலின் தாக்கம் புதிய காதலில் எவ்வித மாற்றம் செய்தது என்பதே கதை.
ஹீரோ ஏகன் பக்கத்து வீட்டு பையன் போல் யதார்த்தமாக இருக்கிறார். ஒரு நல்ல நடிகர் என்று பல இடங்களில் நிரூபிக்கிறார். நாயகிகள் தேவி, பெமினா இருவருமே கேரக்டரின் சாராம்சத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஏகனின் நண்பர் கேரக்டர் உள்பட எல்லோரும் கொடுத்த வேலைக்கு நியாயம் செய்துள்ளனர்.
இந்தப்படத்தின் பலம், இசையமைப்பாளர் சித்துக்குமார். அட்டகாசமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி காதல் நிரம்பி வழியும் பிரேம்களால் ஹைக்கூ பாடியிருக்கிறார். இயக்குனர் யுவராஜ் சின்னசாமி, பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த கல்லூரி காதல் கதையை திறம்பட கையாண்டுள்ளார். பெண்கள் கல்லூரியில் சேரும் ஒரே ஒரு ஆண் என்ற ஐடியாவே ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது.
