Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாடல் அழகியை மணந்தார் ஹம்சவிர்தன்

சென்னை: தமிழில் ‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்த ஹம்சவிர்தன், தற்போது தனது பெயரை ‘லியோ ஹம்சவிர்தன்’ என்று மாற்றியுள்ளார். இவர், மறைந்த வெள்ளிவிழா நாயகன் ரவிச்சந்திரனின் மகன். தற்போது லியோ ஹம்சவிர்தன், கேரளாவை சேர்ந்த மாடல் அழகி நிமிஷாவை புதுச்சேரியில் வைத்து திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணமான இது, இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவரது முதல் மனைவி சாந்தி காலமானார். இதை தொடர்ந்து சோகத்தில் மூழ்கியிருந்த ஹம்சவிர்தன், தற்போது அதிலிருந்து மீண்டெழுந்து தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். தமிழில் 2 படங்களில் நடிக்கிறார்.