Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹான்ஸ் ஜிம்மர் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

நாளை திரைக்கு வரும் ‘ராமாயணா’ என்ற படத்தில், ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றியது குறித்து, ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் அழகான வழியை இசை கொண்டிருக்கிறது. ‘ராமாயணா’ படத்தில் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றியது, காலங்கள் கடந்த அந்த காவியத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருந்து கொண்டு, புதிய இசை சாத்தியங்களை முயற்சித்து பார்த்தது, சிறப்பான ஒரு படைப்பாற்றல் பயணமாக அமைந்து இருந்தது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்.

இன்னும் புதிதாக முயற்சித்து பார்ப்பதற்கும், உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ராமாயணா’ இசை பயணம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குனர் நிதேஷ் திவாரி ஆகியோர், இப்படத்தின் இசையை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளனர்.