Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹார்ட்டின் விமர்சனம்...

ஜெய்ப்பூரில் வாட்ஸ்அப் மணிஓட்டலில் பணியாற்றுகிறார், சனந்த். அவரை ஐடி கம்பெனி ஊழியரான தமிழ்ப்பெண் இமயா காதலிக்கிறார். அதை சனந்த் ஏற்க மறுத்து, மடோனா செபாஸ்டியனுடனான தனது காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை என்கிறார். இதனால் இமயா, மடோனா செபாஸ்டி

யனுடன் மீண்டும் சனந்தை சேர்க்க முயற்சிக்கிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய சனந்த், பழைய நினைவுகளை இழக்கிறார். ஆனால், மடோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.

பிறகு நடப்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். சனந்த், மடோனா செபாஸ்டியன் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். இருவரும் இயல்பாக நடித்துள்ளனர். புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு இமயா.டி மிகவும் இயல்பாகவும், நேர்த்தியாகவும் நடித்துள்ளார். வாட்ஸ்அப் மணி, டெப்னிதா ஜோடி ஓரளவு கவனத்தை ஈர்க்கிறது. உமா பத்மநாபன், மேத்யூ வர்கீஸ், பிரகதி, அஜித் கோஷி ஆகியோர் அந்தந்த கேரக்டருக்கு பொருந்தியுள்ளனர்.

ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை முகேஷ்வரன்.வி நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்களை கேட்கலாம். பின்னணி இசையில் அசத்தியுள்ளார். பரத் விக்ரமன் எடிட்டிங் குறிப்பிடத்தக்கது. எழுதி இயக்கியுள்ள கிஷோர் குமார், ஞாபக மறதியை அடிப்படையாக வைத்து மென்மையான காதலை சொல்லியிருக்கிறார். இந்நாள் காதலியுடனா? முன்னாள் காதலியுடனா? ஹீரோ யாருடன் சேருவார் என்ற சஸ்பென்ஸ் கடைசிவரை நீடித்தாலும் கூட, காதல் காட்சியையாவது இன்னும் அழுத்தமாக சொல்லிஇருக்கலாம்.