Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோவாக நடித்த தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை

பா.ரஞ்சித் உதவியாளர் தென்பாதியான் எழுதி இயக்கியுள்ள படம், ‘அங்கீகாரம்’. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படத்தில், தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த வரவேற்பு, ஒரு நடிகராக எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தயாரிப்பாளராக இருந்து, தற்போது ஒரு நடிகராக மாறி வெற்றிபெற்றதை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஆனால், எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் சில திரையரங்கு உரிமையாளர்கள், ‘இப்படத்தில் வேறொரு கதையை படமாக்கி இருக்கலாம்.

வேறொரு ஹீரோவை நடிக்க வைத்திருக்கலாம்’ என்று என் காதுபடவே பேசுகிறார்கள். இப்போதுதான் மக்கள் எனக்கு ஓரளவு வரவேற்பு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் எனது இயக்குனர் தென்பாதியான். அவர் சொன்னதை மட்டுமே திரையில் செய்தேன். இப்படம் ஜெயித்தால், பணியாற்றிய அனைவருக்கும் வாழ்க்கை கிடைக்கும். இன்னும் பத்து வருடங்களில் கண்டிப்பாக நான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகனாக மாறி ஜெயிப்பேன்’ என்றார். மற்றும் தங்கையாக நடித்த இசபெல்லா, கோச் ஆக நடித்த வசுந்தரா காஷ்யப் பேசினார்கள்.