Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பூஜாவுக்காக ஆட்டோவில் சென்ற ஹீரோ

பாலிவுட் இளம் முன்னணி ஹீரோ வருண் தவான் நடிப்பில், கடந்த ஜனவரி மாதம் ‘பார்டர் 2’ என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ என்ற இந்தி படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை வருண் தவான் தந்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார்.

வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் பணியில் வருண் தவான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மும்பை நகர வீதிகளில் ஆட்டோக்களில் பயணித்து, தனது படத்தை புரமோட் செய்து வருகிறார். ‘ஆட்டோ ரிக்‌ஷா பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.